கொழுப்பைக் கரைக்கும் ஸ்நாக்ஸ் இதுதான்… தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடுங்க; டாக்டர் கார்த்திகேயன்
உப்புக் கடலையை ஒரு கைப்பிடி அளவிற்கு தினமும் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
உப்புக் கடலையை ஒரு கைப்பிடி அளவிற்கு தினமும் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பெரும்பாலான ஸ்நாக்ஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், நமக்கு எளிதாக கிடைக்கும் உப்புக் கடலையை ஸ்நாக்ஸாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில், தினமும் ஒரு கைப்பிடி அளவில் உப்புக் கடலை சாப்பிடுவதன் மூலம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீஷியம் ஆகிய சத்துகள் நமக்கு கிடைக்கிறது. இது எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி செரிமான பிரச்சனைகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை இவை குறைவாகவே உயர்த்துகின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகளும் இதனை சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். இதேபோல், கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலும் உப்புக் கடலையில் இருக்கிறது. அதன்படி, இருதய நோயாளிகளும் இதனை சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
அதனடிப்படையில், உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு வகைகளுக்கு மாற்றாக, இது போன்ற சத்தான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.