Advertisment

தினமும் 2 கப் மோர்: இவ்ளோ கால்சியம் இருக்கு!

தமிழகத்தில் பல நகரங்களில், சிறுநகரங்களில் பாரம்பரிய உணவு முறையில் உள்ள நன்மைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் பேசி பரப்பியவர் மருத்துவர் கு. சிவராமன்.

author-image
WebDesk
New Update
Buttermilk

அனைவரும் தினமும் 2 கப் மோர் குடிப்போம். தினசரி தேவையான கால்சியத்தைப் பெறுவோம்.

பாரம்பரிய உணவு முறை மற்றும் அவற்றில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் 2010-க்குப் பிறகு புதிய பாய்ச்சலை எடுத்தது. இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை, சித்த மருத்துவம் பற்றி பல ஊர்களில் ஏராளமான கருத்தரங்கு கூட்டங்கள் நடந்தது. அதில் பெரும்பாலான கூட்டங்களில் மருத்துவர் கு. சிவராமன் இருந்தார். தமிழகத்தில் பல நகரங்களில், சிறுநகரங்களில் பாரம்பரிய உணவு முறையில் உள்ள நன்மைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் பேசி பரப்பியவர் மருத்துவர் கு. சிவராமன்.

Advertisment

நம் அன்றாட உணவுகளில் என்னென்ன உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், எந்தெந்த உணவுகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்ற மருத்துவ சிவராமன் அறிவியல் மொழியில் பேசியதே அவருடைய கருத்துகள் பரவலாக சென்றடைந்ததற்கு காரணம்.

நவீன பரபரப்பான வாழ்க்கையில், நுகர்வுக் கலாச்சாரத்தில் பலரும் துரித உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் எளிய உணவான மோரில் உள்ள நன்மைகளை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சிவராமன், “200 கிராம் 1 கப் அளவு மோரில் 240 மில்லி கிராம் கால்சியம் இருக்கும் என்று கூறுகிறார். ஒரு நாளைக்கு நமக்கு 1 கிராம் கால்சியம் வேண்டும், அதனால்,  4 கப் மோர் குடித்தாலே 1 கிராம் கால்சியம் கிடைத்துவிடும். அதனால், நாம் தினமும் 2 கப் மோர் குடித்தால் போதும். மீதமுள்ள கால்சியம் நாம் சாப்பிடும் மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கு” என்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get to know the health benefits of buttermilk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment