வயிற்று பிரச்சனையில் குறிப்பாக Irritable Bowel Syndrome என்று அழைக்கப்படும் நோயால் அவதிப்படுவோம். இந்த நோயால் அவதிப்படும் நபர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி, மலம் வெளியேற்றத்தில் மாற்றம் ஏற்படும்.
இந்நிலையில் குறிப்பாக ஐ.பி.எஸ் (IBS) நோய் இருப்பவர்கள் பால் பொருட்களை சாப்பிட்டால் பாதிப்பு அதிகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எஸ் பாதிக்கப்பட்ட 4-ல் ஒருவருக்கு மட்டும்தான் பால் பொருட்கள் ஒற்றுக்கொள்ளமால் இருக்கிறது. இதனால் வயிற்று பிரச்சனை வருவதற்கு பால் பொருட்கள்தான் காரணம் என்று சொல்ல முடியாது.

ஆனால் வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் பால் பொருட்களை சாபிட்டால் நிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது.
இதுபோல அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் கூட வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சரியான உறக்கம் இல்லாமல் இருப்பது, துரித உணவுகளை சாப்பிடுவது, உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது முக்கிய காரணம்.
இந்நிலையில் ஐ.பி.எஸ் நோய் வந்தால் முழுமையாக குணமடைவது சாத்தியம் இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றம் மட்டும் உடல் பயிற்சி செய்வது கட்டாயம் நிலையை சீராக்கும்.