தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய்
தேங்காய் -1/2 முடி
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை
தேங்காய் பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி
பச்சை கற்பூரம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது சூடான பிறகு பாசி பருப்பு சேரத்து மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும். பின்னர் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் பருப்பை நன்கு வேக வேண்டும்
பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அது சூடான பிறகு சிறிது சிறிதாக நறுக்கிய தேங்காய், முந்திரி பருப்பு, காயந்த திராட்சை பொன்னிறத்திற்கு வறுத்து கொள்ளவும்.
பிறகு வெல்லம் கரைய ஒரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
வெல்லம் கரைந்ததும் அதில் தேங்காய் பால் ஊற்றவும். பிறகு வேக வைத்த பாசி பருப்பை வெல்லம் தேங்காய் பால் கலவையில் சேர்த்து இவற்றுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு சிறிய துண்டு பச்சை கற்பூரம் சேர்க்கவும்.
இதில் வறுத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு, காயந்த திராட்சை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து பருப்பு பாயாசம் தண்ணீர் பதத்தில் இருக்கும் போதே இறக்கி விடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“