கீரை என்றாலே ஆரோக்கியம் தரும் ஆனால் அந்த கீரை பலருக்கும் பிடிக்காது. காரண அதன் செய்முறை தான். சிலருக்கு கீரையை எப்படி செய்வது என்று தெரியாமல் செய்வதால் அதன் உண்மை சுவை இல்லாமல் போய்விடும்.
சிறுகீரையில் வைட்டமின் A, B, C, மற்றும் இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
சத்துக்கள்: கண்களுக்கு நல்லது, எலும்புகளுக்கு உறுதியளிக்கும். ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்படும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இந்த சிறுகீரையாகும்.
இதனாலேயே பலருக்கும் கீரை பிடிக்காது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் அளிக்க கூடிய சிறுகீரையை ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்வார்கள். சிறுகீரை பருப்பு கடைசல் செய்வது பற்றி ரேகா’ஸ் வீட்டு சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
சிறுகீரை
பாசி பருப்பு
மஞ்சள் தூள்
எண்ணெய்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
தக்காளி
சீரகம்
மிளகு
உப்பு
கடுகு
உளுந்து
வர மிளகாய்
கறிவேப்பிலை
பெருங்காய்த் தூள்
செய்முறை
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து பருப்பை வேகவைத்து அதனுடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து சிறிது புளி சேர்த்து வேக விடவும்.
நன்கு வெந்து கொதி வந்ததும் 10 வைத்து மீண்டும் கொதிக்க விட்டு பின்னர் இதில் தாளிப்பை சேர்க்க வேண்டும்.
சிறுகீரை பருப்பு கடையல்|healthy Sirukeerai masiyal|Tropical Amaranth|Spinach |Today Lunch#shorts
தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சிறிது சேர்த்து கீரையில் சேர்த்து இறக்கினால் பருப்பு கீரை கடைசல் ரெடி ஆகிவிடும்.