நாம் தினமும் பருப்பு சாப்பிடுவோம். ஆனால் அதை நாம் ஒரு புரத சத்து நிறைந்த உணவாக பார்ப்பதில்லை.
ஒரு நாளைக்கு அவரவர் உடல் எடை பொருத்து புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் பருப்பில் 16 கிராம் நார்சத்து மற்றும் 24 கிராம் புரோட்டீன் இருக்கிறது. ஆனால் 100 கிராம் பருப்பை வீட்டில் இருக்கும் 4 பேருக்கு சமைத்து கொடுத்தால், ஒருவருக்கு 2 முதல் 3 கிராம் புரோட்டீந்தான் கிடைக்கும். இதனால் உங்களுக்கு முடி உதிர்வு, சோர்வு, சோம்பல் ஏற்படும்.

புரோட்டின் சத்து என்பது 20 அமினோ ஆசிட்களால் ஆனது. இதில் 9 வகையான அமினோ ஆசிட் நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கும். தயிர், பன்னீர், சிக்கன், மீன், முட்டை ஆகியவற்றில் இந்த 9 வகை அமினோ ஆசிட் கிடைக்கிறது. இதனால்தான் நாம் விலங்கில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை எடுத்துகொள்ள வேண்டும்.
பருப்பில் எப்படி புரத சத்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு கார்போஹைட்ரேட்டும் இருக்கிறது. இதனால் விலங்கிலிருந்து கிடைக்கும் புரோட்டீன் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.