ஹெல்தியான, சுவையான பேரிச்சம்பழ அல்வா செய்வது பற்றி பார்ப்போம்.
பால் – ½ லிட்டர்
பேரிச்சம்பழம் – 200 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
துருவிய தேங்காய் – 2-3 டீஸ்பூன
நெய் – 4-5 டீஸ்பூன்
முந்திரி – 10- 12
பாதம் – 10-12
திராட்சை – 10-12
சிறிது ஏலக்காய் தூள்
செய்முறை
முதலில் பேரீச்சம்பழத்தை பாலில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதன் பிறகு பேரீச்சம்பழ விதைகளை நீக்கி விட்டு மீதியை மிக்ஸியில் போட்டுபேஸ்ட் செய்யவும்.
முந்திரி, பாதாம் மற்றும் பிற உலர் பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். இதற்குப் பிறகு இந்தக் கடாயில் பேரீச்சம்பழ விழுதைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். இப்போது அதனுடன் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.கெட்டியாகும் வரை கிளறவும். இதற்குப் பிறகு ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து இறக்கினால் கர்ஜூர் அல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“