ஈரலில் ஒட்டியிருக்கும் கொழுப்பு... அடித்து துவைக்கும் இந்த ஜூஸ்; இப்படி குடித்து வாங்க: டாக்டர் சகுல் ஆர் முருகானந்தம்

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு அகற்றலாம் என்று மருத்துவர் சகுல் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு அகற்றலாம் என்று மருத்துவர் சகுல் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Doctor Sagul

நம் உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. நம் உடலில் உற்பத்தியாகும் பல்வேறு நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் கல்லீரலுக்கு இருக்கிறது என்று மருத்துவர் சகுல் முருகானந்தம் கூறுகிறார். மேலும், கல்லீரலில் இருந்து தான் புரதம் உற்பத்தி ஆகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இத்தகைய கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் நம்முடைய உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் இருக்கும் என்று மருத்துவர் சகுல் முருகானந்தம் கூறியுள்ளார்.

அதன்படி, கல்லீரலில் இருக்கும் கொழுப்பை கரைத்து அதனை சுத்தமாக மாற்றும் ஒரு ஜூஸை எவ்வாறு தயாரிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். எனினும், சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தண்ணீர், எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஆகியவை தேவைப்படும். இரண்டு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, அதே தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், வெள்ளரிக்காயையும் சிறிய துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் 5 அல்லது 6 புதினா இலைகளை சேர்த்து கலக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இந்த ஜூஸை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறிது, சிறிதாக குடிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இதைத் தவிர வேறு எதையும் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் கல்லீரலை சுத்தப்படுத்த முடியும் என மருத்துவர் சகுல் முகுந்தன் தெரிவித்துள்ளார். இதனை மாதத்திற்கு ஒரு முறை பின்பற்றலாம் என அறிவுறுத்துகிறார்.

தொடக்கத்தில் ஒரு நாள் முழுவதும் இவ்வாறு பின்பற்றுவதற்கு கடினமாக இருந்தால் மதியம் வரை இந்த முறையை பின்பற்றலாம். அதன் பின்னர், ஒரு நாள் முழுவதும் இதனை செய்யலாம் என்று மருத்துவர் சகுல் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இந்த ஜூஸை நாள் முழுவதும் குடித்த பின்னர், அன்றைய தினம் இரவில் சிறிதளவு ரசம் சாதம் சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். 

நன்றி - Dr Sagul R Mugunthan Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to help cleanse your liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: