உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்காக தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுகளுடன் கருவேப்பிலையை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறிய நிலையில் கருவேப்பிலை சட்னியை ஷர்மிபாலா யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணை நோயாக இரத்த கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. கறிவேப்பிலை கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதால் இதனை மருந்தாக பயன்படுத்தலாம் என சிவராமன் கூறுகிறார். தினசரி கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்.
கறிவேப்பிலையில் இரும்புச் சத்தும் உள்ளது. இவற்றை தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். சர்க்கரைக்கு மருத்து சாப்பிடுபவர்கள் மருந்துடன் சேர்த்து கருவேப்பிலையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உடலுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கிறது.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.