உடல் எடை குறைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் தேனை சாப்பிட வேண்டுமா ? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். இந்நிலையில் நாம் முதலில் தேன் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
தேன் பார்ப்பதற்கு அடர்த்தியான பிரவுன் நிறத்தில் இருக்கும். தாவரங்களில் உள்ள சர்க்கரை சுரக்கும் திரவத்தை சுத்திகரித்து தேனை தேனீக்கள் உருவாக்குகிறது. இதில் அதிக அளவு குளுக்கோஸ் உள்ளது.மேலும் இதில் இருக்கும் மொனோ சாக்கரைட் பிரக்டோஸ் தான் தேனை இனிப்பாக்குகிறது.
தேனில் ஆன்டி ஆக்ஸிடண்ட், பீனோலிக் ஆசிட், பிளாபாய்ட்ஸ் இருக்கிறது. இதில் சுத்தமாகவே கொழுப்பு சத்து இல்லை. குறைந்த அளவு புரோட்டீன், நார்சத்துக்கள் உள்ளது. இதுபோல இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கிறது. இந்நிலையில் தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இளம் வயதில் சீக்கிரமாக வயதாகும் குறைபாட்டை தடுக்கிறது.
டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் நிச்சயமாக தேன் எடுத்துக்கொளும்போது கவனமாக இருக்க வேண்டும். தேன் அதிக இனிப்பாக இருந்தாலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்தை குறைக்கும் குணம். நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது இதனால் இதை நாம் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் அடிபோநெக்டின் என்ற சத்து, வீக்கத்தை கட்டுப்படுத்தவும், ரத்த சர்க்கரையை சீராக வைத்துகொள்ளவும் உதவுகிறது.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை குறைவாக இருக்கும் நாட்ளில், தேன் சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் தேனை லெமன் டீ அல்லது எலுமிச்சை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்.