இட்லி சாப்பிட்ட உடனே உடலில் சுகர் அதிகரிக்கிறது என்று பல பேர் கூறுவார்கள். அதிலும் இட்லி மிகவும் பிடிக்கும் ஆனால் சர்க்கரை நோய் இருப்பதால் இதனை சாப்பிட தயக்கமாக உள்ளதாகவும் கூறுவார்கள். ஆனால் இனிமேல் அதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் மருத்துவர்கள் சொல்லும் இந்த முறையை பின்பற்றினாலே போதும் சர்க்கரை நோயாளிகள் இனி இட்லி சாப்பிட கவலை பட தேவையில்லை.
இட்லி நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான் இந்த இட்லியை எப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது என்பதை பற்றி பார்க்கலாம்.
இட்லி சாப்பிடும் போது அதனுடன் சாம்பார், சட்னி மட்டும் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கக்கூடும். எனவே இதனுடன் சேர்த்து நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
காரணம் இட்லி சாப்பிடுவதால் நமக்கு பசி விரைவில் அடங்காது. நமது பசியை அடக்க நார்ச்சத்து புரதச்சத்து கொழுப்புச்சத்து உதவி புரிகிறது. எனவே இட்லியுடன் இவை அனைத்து சத்தும் உள்ள உணவையும் சேர்த்து சாப்பிட்டால் தான் நம் உடலுக்கு நல்லது.
உதாரணத்திற்கு இட்லியுடன் வடை, பருப்பு, காய்கறி கூட்டு இவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சர்க்கரை விரைவில் ஏறாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இட்லி சாப்பிட விரும்பும் சர்க்கரை நோயாளிகள் இனி இட்லியை இவ்வாறு சாப்பிட்டாலே போதும் உடலில் சர்க்கரை விரைவில் அதிகரிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“