இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. நீரிழிவு என்பது பொதுவானதாகிவிட்டது. இந்த நிலையிலும் உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொண்டால், சாத்தியமான தீர்வை காணலாம் என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி நமது வீட்டு சமையலறையிலே அத்துனை உணவு மருந்துகளும் உள்ளன.
சீரகம்
அந்த வகையில் சீரகம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாகும். இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
சீரகம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாகவும் அறியப்படுகிறது. மேலும், சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.
2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 50 மற்றும் 100 மி.கி அளவு பச்சை சீரகம் டைப்2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. இது நீரிழிவு நோயின் சிக்கல்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், சீரகம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுவது தெரியவந்துள்ளது.
வறுத்த சீரகம் அல்லது தூள் பருப்பு, தயிர் அல்லது சாலட்டில் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்க சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு உணவிற்கும் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கிளாஸ் ஜீரா தண்ணீரைக் குடிப்பது இரத்த குளுக்கோஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
ஊட்டச்சத்து மருத்துவர் பேட்டி
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு மருத்துவம் மற்றும் முழுமையான ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் நடிகர் ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில், நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொண்டிருந்தால், சீரக விதைகளை உட்கொள்வதைக் கண்காணிப்பது அவசியம் என்று எச்சரித்தார்.
மேலும், சீரகத்தை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மிகக் குறைக்கும். இதனால், இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படும், மருத்துவ அவசரநிலைக்கு வழிவகுக்கும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஜீராவின் கலப்பட பொருள்களை உட்கொள்ளாமல், கரிம கருஞ்சீரக விதைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஜீராவின் மற்ற நன்மைகள் உள்ளன. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் சீரகத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எதிர்த்துப் போராடலாம்.
இருப்பினும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்றுவருகின்றன. இதனையும் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆயினும் உணவில் துணைப் பொருளாக இதனை சரியான விகிதத்தில் உண்ணலாம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil