scorecardresearch

140mg சுகர் இருக்கிறவங்க கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா? மருத்துவம் கூறுவது என்ன?

கரும்பு ஜீஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக வெயில் காலங்களில் இதை குடிப்பது ஒரு புத்துணர்வை தரும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா?. குறிப்பாக ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் நபர்கள் இதை பருகலாமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

140mg சுகர் இருக்கிறவங்க கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா? மருத்துவம் கூறுவது என்ன?

கரும்பு ஜூஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக வெயில் காலங்களில் இதை குடிப்பது ஒரு புத்துணர்வை தரும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா?. குறிப்பாக ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் நபர்கள் இதை பருகலாமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

கரும்பு ஜீஸ் சத்தானதா ?

240 எம்எல் கரும்பு ஜூஸில் 180 கலோரிகள் இருக்கிறது. 30 கிராம் சர்க்கரை இருக்கிறது. இதில் நார்சத்து அதிகமிருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ராலை குறைக்கும். இதில் பொட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு சத்து, சிங், தைமின், ரிபோஃபிலாவின், அமினோ ஆசிட். இருக்கிறது.

இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கூடுதலாக சர்க்கரை உள்ள கரும்புச் சாறு குடிப்பதில் அபாயம் இருக்கிறது. ஆனால் கரும்பு ஜூஸின் க்ளைசிமிக் இண்டெக்ஸ் 43.இது அவ்வளவு அதிகமான க்ளைசிமிக் இண்டெக்ஸ் இல்லை. இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸை குடிக்கும்போது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறிது எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றை அதில் கலக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ் உடன் கரும்பு சாறை சேர்த்து குடிக்கலாம். 200 எம்எல்-க்கு மேலாக குடிக்க வேண்டாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes patients can drink sugar cane juice