scorecardresearch

அரிசி உணவை இப்படி சாப்பிடுங்க… சுகர் பேஷண்ட்ஸ் ப்ளீஸ் நோட்!

அரிசி என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.

அரிசி என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. அரிசியை தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் புரத சத்து, நார் சத்து மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அரிசியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அரிசியில் அதிக கிளைசிமிக் இன்டக்ஸ் இருக்கிறது. எனவே அரிசியை கொழுப்பு சத்து, நார்சத்து, புரத சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால், கிளைசிமிக் இன்டக்ஸ் குறையும்.

கொழுப்பு சத்து’ கிளைசிமிக் இண்டக்ஸ் அளவை குறைக்கும். பாலில் செய்த இனிப்புகளை சிறிய அளவில் எடுத்துகொள்ளலாம். தயிரில் அதிக அளவில் கொழுப்பு சத்து, புரத சத்து இருப்பதால் இது கிளைசிமிக் இன்டக்ஸை குறைக்கும்.

இதுபோல காய்கறி, பனீர், ராஜ்மா, கொண்டைக்கடலை, பருப்பு போன்றவைகளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.      

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes patients can eat rice but note these before you eat