உங்களுக்கு கட்டுப்பாடற்ற வகை-2 நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க குறைந்த கார்ப்போஹைட்ரேட் உணவுகள் உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் தொடர்பான துலேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள், நாள் முழுவதும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைப்பது ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறுகிறது.
இதையும் படியுங்கள்: தினமும் ஒரு முட்டை.. உடல் பருக்காது.. வீட்டிலேயே செய்யலாம் எக் ஒயிட் ஓட்மீல்
ஆய்வில் குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் வழக்கமான அளவை எடுத்துக் கொண்டவர்களின் இரத்த சர்க்கரை அளவின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கவனிக்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, குறைந்த கார்போஹைட்ரே உணவை எடுத்துக் கொண்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறிக்கும் ஹீமோகுளோபின் A1c அளவு, வழக்கமான உணவை எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது, அதிக அளவு குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும், குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டவர்களின் உடல் எடை குறைந்து, குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்துள்ளதைக் காண முடிந்தது.
குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஒரு பயனுள்ள அணுகுமுறையாக இருக்கலாம், இருப்பினும் கூடுதல் ஆய்வுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு என்பது உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் ஏற்படும்.
வகை 2 நீரிழிவு நோய், பல உறுப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கல்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே அதிகரிப்பதற்கு முன்கூட்டிய நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும், இது ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கிறது.
வகை 2 நீரிழிவு, மங்கலான பார்வை, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை மற்றும் ஒட்டுமொத்த சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கலாம் மற்றும் இதய நோய், பார்வை இழப்பு மற்றும் சிறுநீரக நோய் போன்ற பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஆய்வின் கண்டுபிடிப்புகள், ப்ரீடியாபயாட்டீஸ் (ஆரம்ப நிலை) உள்ளவர்களுக்கும் முக்கியமானது, அதன் A1c அளவுகள் இயல்பை விட அதிகமாக இருக்கும், ஆனால் நீரிழிவு என வகைப்படுத்தப்படும் நிலைகளுக்குக் கீழே உள்ளது.
பொதுவாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.
இருப்பினும், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு நீரிழிவு நோயைத் தடுக்கிறது என்பதை ஆய்வு நிரூபிக்கவில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடல்நல அபாயங்களைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கான கதவைத் திறக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil