உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி இருப்பதும் தமிழர்கள் தான். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனடிப்படையில் சர்க்கரை நோயாளிகள் தினசரி வாழ்வியலில் ஒரு சின்ன செயலை செய்தால் போதும் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம் என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சர்க்கரை நோயாளிகள் அமர்ந்தே இருக்கக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இரண்டு முதல் ஐந்து நிமிடம் எழுந்து நிற்க வேண்டும். இதனால் ஒன்பது சதவீதம் சர்க்கரை அளவு குறையும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நிற்பதற்கு பதிலாக நடந்தால் 20% இந்த சர்க்கரை அளவுகளை குறைக்க முடியும்.
மாரடைப்பு வரும் வாய்ப்பை 3ல் 1 பங்காக குறைக்கலாம்!! எப்படி? Doctor Karthikeyan
ஒரு நாளைக்கு இரண்டு நிமிடமாக 20 முறை நடந்தால் கூட மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் வராது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். இதற்கு 30 சதவீதம் வாய்ப்பு குறைவு என்றும் மாரடைப்பு வாய்ப்பை 3 இல் 1 பங்காக குறைக்கலாம் என்றும் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.