சராசரியாக ஒருவருக்கு 600 லிருந்து 700 வரை இன்டர்நேஷனல் யூ எஸ் வைட்டமின் டி தேவைப்படுகிறது என்று டாக்டர் சந்தோஷிமா தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இப்போ உள்ள ஆராய்ச்சிகள் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று கூறுகிறது.
இதைத்தவிர தசைகள் தளர்ச்சி அடைதல், பல் வலி, கல்லீரல் பிரச்சனைகள் போன்றவை வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும்.
தினமும் காலை வெயிலில் எந்த கிரீமும் பயன்படுத்தாமல் நிற்க வேண்டும். பின்னர் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இயற்கை காளான்கள் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிடலாம். அதே போல குழந்தைகளுக்கு முட்டையின் மஞ்சள் கருவு கொடுப்பதாலும் வைட்டமின் டி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.