உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர். அவர்கள் சுகரைக் குறைக்க காலையில் 20 நிமிஷம், மாலையில் 20 நிமிஷம் நடக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி அதோடு சேர்த்து ஒரு கசாயத்தையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் டாக்டர் நித்யா கூறுகிறார். தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் எல்லாமும் தினமும் குடிக்க வேண்டிய முக்கிய கஷாயம் செய்வது பற்றி அவர் பரிந்துரைக்கிறார்.
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ
பிரண்டை
பூண்டு
செய்முறை
சர்க்கரை நோயாளிகள் குடிப்பதற்கு ஆவாரம் பூ கசாயம் குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் ஆவாரம் பூ பொடி போட்டு அதில் பிரண்டையை இடித்து போடவும்.
பின்னர் அதில் பூண்டும் தட்டி போட்டு கொதிக்க விடவும். நல்ல கொதித்து வந்ததும் அதை வடிகட்டி தினமும் காலையில் குடிக்கலாம்.
சுகர் நோயால் வரும் பக்க விளைவுகள் குறையும் | Sugar control tips in tamil | Dr.Nithya | Mr ladies
அவாரம் பூ குடிநீர் காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் உணவு எடுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்கலாம். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
எலும்புகள், நரம்புகள் வலிமையாக இருக்கும். சர்க்கரை அளவு குறைக்க உதவும். 20 நாட்களுக்குள்ளேயே நல்ல மாற்றம் கிடைக்கும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சர்க்கரை அளவு குறைந்து வருவதை காணலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.