சர்க்கரை நோய் ஏற்பட்டால் நிச்சயமாக சர்க்கரையை நாம் தவிர்த்துதான் ஆக வேண்டும். அப்படி தொடர்ந்து சீனியை சாப்பிட்டல் உடல் எடை அதிகரிக்கும். கூடவே இதய ரத்த கூழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு வரை ஏற்படலாம். இதனால் எப்போதும் சர்க்கரைக்கு மாற்றைத் தேடிக்கொண்டே இருப்போம். இந்நிலையில் இந்த மூன்று பொருட்கள் சர்க்கரைக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது
ஸ்டிவியா (Stevia) :இது ஒரு செயற்கை இனிப்பூட்டி. இது முற்றிலும் இயற்கையானது. தெற்கு அமெரிக்காவில் உள்ள ஸ்டிவியா ரெப்பைடினா என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. சர்க்கரையை விட 450 மடங்கு அதிக இனிப்பு இதில் இருக்குகிறது. நாம் சாப்பிடும் சீனியை தவித்து ஸ்டிவியாவை சேர்த்துகொண்டால், உடல் எடை அதிகரிக்காது. ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் இந்த செயற்கை இனிப்பூட்டி-க்கு பக்க விளைவுகள் இருப்பதாக தெரியவில்லை.
பேரிச்சம்பழம் : இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், வெள்ளை சீனிக்கு இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும். ஆனால் இதில் கலோரிகள் இருக்கிறது. அதேவேளையில் நார்சத்து, பொட்டாஷியம், மெக்னிஷியம், வைட்டமின் பி6 மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் இதை நாம் ஒரு பேஸ்ட் மாதிரி மாற்றி, அதை பால் மற்றும் மற்ற பானங்களில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதில் இருக்கும் இனிப்பு சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்காது. அளவோடு சாப்பிட்டால் நிச்சயமாக ரத்த சர்க்கரை உடனடியாக அதிகரிக்காது.
வெல்லம்: குறைந்த விலையில் சீனிக்கு மாற்றாக இருப்பது வெல்லம்தான். கரும்பை, வேக வைக்கும்போது அது கடினமாக மாறும். அதை துண்டுகளாக வெட்டிதான் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் வெல்லம் சேர்த்த கட்டன் காப்பியை நாம் பருகுவோம். இதில் அதிக இரும்பு சத்து இருப்பதால், கூடுதல் நன்மை தருகிறது. ஆனால் நிச்சயமாக அளவாக இதை நாம் சாப்பிட வேண்டும் என்பது முக்கியம்.