‘நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, ஒரு நாளுக்கான மொத்த கிலோ கலோரியில் 40-45 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறையின் தலைவர் டாக்டர் சோனியா காந்தி கூறினார்.
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மற்றும் தங்களுக்கு நன்கு தெரிந்த அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை சாபிடலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தேவை என்பது உண்மைதான். ஆனால், அவற்றின் தரம் மற்றும் அளவு கவனிக்கப்பட வேண்டும். உடலில் குளுக்கோஸாக மாறி சர்க்கரையின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளுக்கு முன்னுரிமை தரலாம்.
‘நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, ஒரு நாளுக்கான மொத்த கிலோ கலோரியில் 40-45 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறையின் தலைவர் டாக்டர் சோனியா காந்தி கூறினார்.
அப்படியானால் சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு அரிசி சாப்பிடலாம்? “ஒரு நீரிழிவு நோயாளிக்கு குறைந்தபட்சம் 30 கிராம் அரிசி கொடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதே கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் கொண்ட 30 கிராம் கோதுமை சப்பாத்தியுடன் ஒப்பிடும்போது, அரிசியிலிருந்து குளுக்கோஸின் உறிஞ்சுதல் விகிதம் அதிகமாக உள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 30 கிராம் அரிசி அல்லது தானியம் சார்ந்த பிற பொருட்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளது” என்று டாக்டர் சோனியா காந்தி கூறினார். உணவில் உள்ள லேபிள்களைப் படித்து கலோரிகளையும் ஒரு உணவுப் பொருளின் ஊட்டச்சத்தையும் தெரிந்துகொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.
ஒரு நபர் ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கலோரிகளின் மொத்த அளவைப் பொறுத்தவரை, ஒரு நபரின் உயரம், எடை, உடற்பயிற்சி முறைகள் மற்றும் மருந்தின் அளவைப் பொறுத்தது என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். நீரிழிவு நோயாளிகள் சரியான அளவில் கார்போஹைட்ரேட்டுகள்/கலோரிகளை உட்கொள்ளலாம். இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சாதாரணமாக வைத்திருக்க முடியும். இது வழக்கமான இடைவெளியில் சிறிய அளவிலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதன் மூலம் சாத்தியமாகும்.” என்று ஒரு மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் சோனியா காந்தி கூறினார்.
டாக்டர் சோனியா காந்தியின் கருத்துப்படி, நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படவில்லை. கார்போஹைட்ரேட்டின் தரம் மற்றும் அளவைக் கருத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை, மைதா, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், வெல்லம், தேன், பழச்சாறுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற எளிய கார்போஹைட்ரேட்டுகளை விட முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் எப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு பகுதி பரிமாற்றத்தின் படி, 30 கிராம் அரிசி 20 கிராம் கார்போஹைட்ரேட் தருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கலோரிகளின் விநியோகம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்ட அளவு மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கிராம் அளவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், கார்போஹைட்ரேட்டால் உற்பத்தியான குளுக்கோஸ் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே, 30 கிராம் அரிசி அல்லது சமைக்கப்படாத அரிசி ஒரு பகுதி அளவாக கணக்கிடப்படுகிறது” என்று டாக்டர் சோனியா காந்தி கூறினார்.
சிவப்பு அரிசி சிறந்ததா?
சிவப்பு அரிசி, எளிய வெள்ளை அரிசியுடன் (.4 கிராம்) ஒப்பிடும்போது, அதிக நார்ச்சத்து (1.8 கிராம்) உள்ளது. எனவே இது ஒரு சிறந்த மாற்று. ஆனால் வெள்ளை அரிசி மற்றும் சிவப்பு அரிசியின் கார்போஹைட்ரேட் அளவுகளில் அதிக வித்தியாசம் இல்லை என்று டாக்டர் சோனியா காந்தி கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.