சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான இனிப்புகளை எடுத்துக்கொண்டாலும். ஒருவித பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்நிலையில் டிரை புரூட்ஸ், பேரிச்சம்பழம் , உலர் திராச்சை, நட்ஸ் ஆகியவை எடுத்துக்கொள்ளலாமா என்ற சந்தேகம் ஏற்படும்.
இந்நிலையில் நாம் டிரை புரூட்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உலர் திராச்சைகள், தேன் நெல்லிக்காய், இனிப்பு நெல்லிக்காய், ஏப்ரிகாட்ஸ், அத்தி பழம், பீச் பழங்கள்.
இதில் பையோ ஆக்டிவ் காம்பவுட்ஸ் இருக்கிறது. மேலும் இதில் மினரல்ஸ், வைட்டமின்ஸ் இருக்கிறது. இந்நிலையில் உலர் திராட்சை காய்ந்த பிறகு அதில் இருக்கும் மினரல்ஸ் மீண்டும் அப்பழத்திற்கு கிடைக்கிறது. இதில் பைட்டோ கெமிகல்ஸ்,ஆண்டி ஆக்ஸ்சிடண்ட் உள்ளது. டிரை புரூட்ஸில் 3 மடக்கு கார்போஹைட்ரேட் இருக்கிறது. குறைந்த புரத சத்து மற்றும் அதிக நார்சத்து இருக்கிறது

.
இந்நிலையில் கிரேப்சின் தோல் மற்றும் விதைகளில் இருக்கும் சத்து வீக்கத்தை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. உலர் திராச்சையால் மேலும் நமது ஹார்மோன்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது கணையம் நன்றாக செயல்படுகிறது.
உலக முழுவதிலும் உள்ள மக்கள் டிரை புரூட்ஸ், நட்ஸை சாப்பிடுகிறார்கள். இதனால் கடுமையாக ரத்த சர்ககரை அதிகரிக்கும் என்று எந்த ஆய்வுகளும் சொல்லவில்லை. ஆனால் இது தொடர்பாக அதிகபடியான ஆய்வுகளும் இல்லை.
இதனால் குறிப்பிட்ட சில டிரைப் புரூட்ஸ் வகைகளை அளவாக சாப்பிடலாம். மேலும் ஒட்டுமொத்தமாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் பொருத்துதான் இதை நாம் முடிவு செய்ய வேண்டும்.