சர்க்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் அளவு சீரகாக இருப்பது முக்கியம். இந்நிலையில் நாம் சாப்பிடும் சாப்பாடு நமது ரத்த சர்க்கரையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் நாம் அரிசி மாவை சாப்பிடலாமா ? என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கேட்கையில், குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட மாவை நாம் தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகள் நமது ரத்த சர்க்கரையில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.
அரிசி மாவை நாம் சாப்பிடலாம். அது குலட்டின் ப்ரீ உணவு. ஆனால் அதன் கிளைசிமிக் இண்டக்ஸ் சற்று அதிகம். ஆனால் மைதா மாவை ஒப்பிடு பார்க்கையில் நீங்கள் அரிசி மாவை எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் இதனால் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். இதனால் நாம் குறைந்த அளவில் அரிசி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் குறைந்த கிளைசிமிக் கொண்ட உணவுகளுடன், இதை சேர்த்து நாம் சாப்பிடலாம்.
குறிப்பாக அரிசி மாவை, சிறுதானிய மாவுடன் கலந்து சாப்பிடலாம். இதனால் ஓட்டு மொத்த கிளைசிமிக் இண்டக்ஸையும் அது குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைப்பதற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவியாக இருக்கும்.
இதுபோல அரிசி மாவுடன், சோயா மாவை கலந்து சாப்பிட்டால், புரத சத்து கிடைக்கும். இதுபோல பலா பழ மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரையை கட்டுபடுத்த முடியும். ’பிரவுன் ரைஸ் மாவை நாம் சாப்பிட்டால், அதில் நார்சத்து, வைட்டமின்ஸ், பொட்டஷியம், இரும்பு சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.
இதுபோல முழுதானிய மற்றும் சிறுதானிய மாவில் நார்சத்து, வைட்டமின்ஸ் இருக்கிறது. இதுபோல பாதாம் மாவு, தேங்காய் மாவு ஆகியவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil