சர்க்கரை நோயாளிகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டிய லோ கிளைசீமிக் உணவுகள் பற்றி டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் பெரும்பாலானோருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உணவுப் பழக்கம் ஆகும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுப் பட்டியலை பற்றி டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சர்க்கரையை கட்டுப்படுத்தும் 13 அரிசி வகைகள் | 13 types of rice that control diabetes
1. பார்லி - இதில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. ஜீரணத்தை மேம்படுத்துகிறது. குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதில் அதிகமான புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
2. சிகப்பு அரிசி - மாவுச்சத்து சதவீதம் குறைவு
3. புழுங்கல் அரிசி - இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கொழுப்பு அளவை குறைக்கும்.
4. குதிரைவாலி - இதில் அதிகமான நார்ச்சத்து உள்ளது, இது ஜீரணத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதில் அதிகமான புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5. கருப்பு கவுனி அரிசி - இதில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது ஜீரணத்தை மேம்படுத்த உதவும்.
6. கமூத் - இதில் புரதம் அதிக அளவில் உள்ளதால், உடலின் வளர்ச்சிக்கு உதவும்.
7. நெற்பவளம் ( இட்டிசு அரிசி )
8. தினை
9. குயினோவா அரிசி
10. ராகி
11. சாமை
12. கம்பு
13. பருப்பு வகைகள்
எந்த அளவுக்கு சாப்பாடு எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு புரதத்தை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல நடைபயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.