வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டு வர அதன் சாறுகள் ஈறுகளில் பட பற்களின் ஈறு பிரச்சனை, பல் சொத்தை, பல் கூச்சமிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சளி பிரச்சனை அதிகம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் சுவாச கோளாறுகளிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்க தண்ணீரில் வெற்றிலை போட்டு அதனுடன் சீரகம், லவங்கப் பட்டை சேர்த்து குடித்து வர சுவாச கோளாறு பிரச்சனையிலிருந்து நிம்மதியாக இருக்கலாம்.
வெற்றிலை சாப்பிடுவதால் வயிறு, குடல் பகுதிகளில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்கள், குடல் அழுக்குகள் போன்றவற்றை உடனே நீக்கிவிடும்.
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகளில் இருக்கும் காரைகள் வலுவடைந்து, கீழே விழுந்து அடிபடுதல் காரணமாக எலும்பு முறிதல் பிரச்சனையை தடுக்கலாம்.
வெற்றிலையில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பினை குறைத்து உடல் எடையானது குறைய தொடங்கும். அப்படி எல்லா வகையான பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக இருக்கும் வெற்றிலையில் கசாயம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை
இஞ்சி
மிளகு
சீரகம்
சுக்கு
ஏலக்காய்
பட்டை
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொது வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிக்கட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இதை குடித்து வர உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
VETHALAI KASHAYAM - MEDICINAL BENEFITS. HOW TO MAKE IT RIGHT . வெத்தலை கஷாயம் .
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“