scorecardresearch

கல்லீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் பாஸ்: இந்த உணவுகளை மட்டும் சாப்பிட மறக்காதீங்க

கல்லீரலை பாதுகாக்க, மதுவை முற்றிலும் நிறுத்த வேண்டும், குறைவான கொழுப்பு, உப்பு மற்றும் இனிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். சீரான உடல் எடையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் ஆரோக்கியம்

உடலில் உள்ள 2 வது பெரிய உறுப்பு கல்லீரில். ரத்தத்தை சுத்திகரிப்பது, புரத சத்தை உருவாக்குவது, நச்சுகளை வெளியேற்றும் வேலையை கல்லிரல் செய்கிறது. இந்நிலையில் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களுக்கும் தேவையான  ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் மட்டுமே, ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும். இந்நிலையில் நிபுணர்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, ஒமேகா பேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள், கோதுமை புல், பச்சை காய்கறிகள், சூரிய காந்தி விதைகள், மஞ்சள் ஆகியவற்றை பரிந்துரை செய்கின்றனர்.

இந்நிலையில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு,சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சாச்சுரேடட் கொழுப்பு சத்து ஆகியவை, கல்லீரலில் கொழுப்பை சேகரித்து வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் பேட்டி லிவர் என்ற குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஓமேகா 3 பேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள், சால்மன், மாக்கிரல், சார்டைன்ஸ் என்ற வகை மீன்களில் ஓமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது. வால்நட்ஸ், பிளக்ஸ் விதைகள், சியா விதைகள்,  இவை கல்லிரலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகப்படுத்தும்.

கோதுமை புல்: இதில் க்ளோரோபில் இருப்பதால், கல்லீரலை தூய்மைப்படுத்துகிறது. மேலும் அதன் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.

பச்சை காய்கறிகள் : கீரை, கேல் கீரை, பிரக்கோலி, அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. கல்லிரல் வீக்கத்தை குறைத்து, சேதமடைவதிலிருந்து கல்லீரலை காப்பாற்றுகிறது.

சூரியயகாந்தி விதைகள்: இதில் வைட்டமின் இ இருப்பதால், கல்லீரலை சேதமடைதிலிருந்து பாதுகாக்கும்.

மஞ்சளில் குர்குமின் இருப்பதால், வீக்கத்திற்கு எதிராக செயல்பட்டு கல்லிரலை சேதமடையாமல் பார்த்துக்கொள்கிறது.

கல்லீரலை பாதுகாக்க, மதுவை முற்றிலும் நிறுத்த வேண்டும், குறைவான கொழுப்பு, உப்பு மற்றும் இனிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். சீரான உடல் எடையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Dietary choices can impact liver health here are foods to eat