பூரி மசாலா, பரோட்டா... காலையில் இந்த உணவு மட்டும் சாப்பிட வேண்டாம்: எச்சரிக்கும் உணவியல் நிபுணர் தாரிணி
கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது மியூஸ்லி வாங்குவதற்கு முன், அதில் உள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்க வேண்டும். 100 கிராமில் 20 கிராமுக்கு மேல் சர்க்கரை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது மியூஸ்லி வாங்குவதற்கு முன், அதில் உள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்க வேண்டும். 100 கிராமில் 20 கிராமுக்கு மேல் சர்க்கரை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் பலரது உணவு பழக்க வழக்கங்களும் மாறி இருக்கின்றன. இதனால், ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் நாம் தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் மற்றும் அதற்கான காரணங்களை உணவியல் நிபுணர் தாரிணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை குமுதம் சினேகிதி யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
காலை உணவாக பூரி மசாலா சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், பூரி எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகிறது, மேலும், இது மைதா மற்றும் கோதுமை கலவையால் செய்யப்படலாம். அதனுடன் வழங்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவில் மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் மட்டுமே உள்ளன என்று தாரிணி தெரிவித்துள்ளார்.
மேலும், பரோட்டா மிகவும் மோசமான உணவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மைதாவால் செய்யப்பட்டு, வனஸ்பதி எண்ணெய் சேர்த்து ஏழு முறை சுருட்டி செய்யப்படுகிறது என உணவியல் நிபுணர் தாரிணி கூறுகிறார்.
உப்மாவை வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து செய்தால் நல்லது. ஆனால், வெளியே சாப்பிடும்போது அதில் வனஸ்பதி எண்ணெய் பயன்படுத்தப்படலாம். எனவே, வெளியே உப்மா சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது என்று தாரிணி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
பிரட், மைதாவால் செய்யப்படுகிறது, கோதுமை பிரட் கூட மைதாவில் தான் தயாரிக்கப்படுகிறது. வெண்ணெய் விலை அதிகமாக இருப்பதால், பிரட் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியே. பிரட் உடன் ஜாம் அல்லது சீஸ் சேர்த்து சாப்பிடுவது மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.
கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது மியூஸ்லி வாங்குவதற்கு முன், அதில் உள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்க வேண்டும். 100 கிராமில் 20 கிராமுக்கு மேல் சர்க்கரை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில், இது போன்ற உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று உணவியல் நிபுணர் தாரிணி அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.