சிக்கன் vs மட்டன் ஈரல்: எதுல சத்து அதிகம்? விளக்கும் டாக்டர் அருண்குமார்

மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் ஆகிய இரண்டில் நம் உடலுக்கு அதிக பலன் அளிக்கக் கூடியது எது என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் ஆகிய இரண்டில் நம் உடலுக்கு அதிக பலன் அளிக்கக் கூடியது எது என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Chicken and Mutton liver

சிக்கன் ஈரல் மற்றும் மட்டன் ஈரல் ஆகிய இரண்டிலும் நிறைய சத்துகள் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டில் நம் உடலுக்கு அதிக பலன் அளிப்பது எது என்று மருத்துவர் அருண் குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அறிவியல்பூர்வ விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன்படி, 100 கிராம் அளவிலான சிக்கன் மற்றும் மட்டன் ஈரலில் 160 முதல் 170 கலோரிகள் இருக்கின்றன. இவை இரண்டிலும் சுமார் 20 முதல் 25 கிராம் வரை புரதச் சத்து இருக்கிறது. இது தவிர 5 கிராம் அளவில் ஃபேட், இவை இரண்டிலும் இருக்கிறது. மேலும், இவை இரண்டிலுமே 400 முதல் 500 மில்லி கிராம் அளவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், 100 கிராம் மட்டன் ஈரலில் 6000 யூனிட் வைட்டமின் ஏ இருக்கிறது. ஆனால், 100 கிராம் சிக்கன் ஈரலில் 16,000 யூனிட் வைட்டமின் ஏ இருக்கிறது என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். இதேபோல், 100 கிராம் சிக்கன் ஈரலில் 16 மைக்ரோ கிராம் வைட்டமின் பி12 உள்ளது. அதே நேரத்தில், 100 கிராம் மட்டன் ஈரலில் 85 மைக்ரோ கிராம் வைட்டமின் பி12 இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் நரம்பியல் கோளாறு, இரத்த சோகை போன்ற பிரச்சனை ஏற்படும். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு போதுமான அளவில் வைட்டமின் பி12 சத்து கிடைப்பதில்லை என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இது போன்ற பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டன் ஈரல் சாப்பிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

வாரத்திற்கு ஒரு முறை பெரியவர்கள் அனைவரும் 100 முதல் 200 கிராம் வரையிலான சிக்கன் ஈரல் அல்லது மட்டன் ஈரலை சாப்பிடலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார். குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை 50 கிராம் சிக்கன் அல்லது மட்டன் ஈரல் கொடுக்கலாம். ஆனால், கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் வாரத்திற்கு 50 கிராம் மட்டும் மட்டன் ஈரல் சாப்பிடலாம்.

சிக்கன் ஈரலில் அதிகப்படியான அன்டி பையோடிக் கழிவுகள் இருப்பதில்லை என்று மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். எனவே, நம்முடைய தேவை அறிந்து எந்த ஈரலை எவ்வளவு சாப்பிடலாம் என்று முடிவு செய்து உட்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

நன்றி - Doctor Arunkumar Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Chicken

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: