உணவில் மணமூட்டியாக பயன்படும் பெருங்காயம் செரிமானக்கோளாறு முதல் புற்றுநோய் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் பெருங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும். பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இதற்கு காரணம் உணவில் ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் அளிப்பதே ஆகும்.
அப்படிப்பட்ட பெருங்காயத்தின் முக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செரிமான கோளாறு: உணவு ஜீரணம் ஆவதற்கு பெருங்காயம் மிகச்சிறந்த ஒன்றாகும்.துவரம் பருப்பு சாம்பார், கொள்ளு பருப்பு, ரசம் செய்யும்போது, துளி அளவு பெருங்காயம் சேர்த்தால் அது ஜீரணத்திற்கு உதவும்.
குடல் பிரச்சனை: குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை குறைத்து குடல் புண், குடல் புழுக்கள் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும்.
உடல் எடை: பெருங்காயம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெந்நீரில் ஒரு துளி பெருங்காயத்தூளை கலந்து குடிக்கலாம்.
இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள் பெருங்காயத்தூளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை பிரச்னையை சரி செய்ய உதவும்.
பெருங்காயத்தின் 8 பெரு நன்மைகள் | 8 health benefits of asafoetida
சர்க்கரை நோய்: பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவதோடு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
புற்றுநோய்: மார்பகம், நுரையீரல், குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது 50 சதவீதத்திற்கும் மேல் தடுப்பதாக கூறப்படுகிறது.
மாதவிடாய்: மாதவிடாய் சரியாக வராத பிரச்னை, அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னைகளையும் இது சீர் செய்யும்.
ஆண்மை குறைவு: பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுவதோடு ஆண்மையை தூண்டவும் உதவும்.
சரும நோய்கள்: தோல் தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு பெருங்காயம் சிறந்த ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.