குறிப்பாக நாம் அடிக்கடி அவதிப்படும் சிக்கலில் ஒன்று, அஜீரணம். இந்நிலையில் நமது குடலில் உள்ள ஜீரணத்தை ஊக்குவிக்கும் என்சைம் சுரப்பதில் மாறுபாடு ஏற்படுவதால், அஜீரணம் ஏற்படலாம். இந்நிலையில், தொடர் தூக்கமின்மை, உடல் உழைப்பு செலுத்தாமல் இருப்பதும் கூட அஜீரணம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் மோர் குடித்தால், அது ஒரு ஜீரணிக்கும் அமிலம் போல் செயல்படும். மோரில் இருக்கும் புரோபையாட்டிக்ஸ் உணவை உடைத்து, வயிறு உப்புதலை சரிப்படுத்தும். மோரில் லாக்டிக் ஆசிட் இருப்பதால், செரிமான வழித்தடத்திற்கு நிவாரணம் அளிக்கும்.
இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரில் இயற்கையான என்சைம் இருக்கிறது. இதில் அதிக பொட்டாஷியம் இருக்கிறது. இதனால் ஜீரண சக்தியை அதிகரிக்க முடியும். சாப்பிட்ட பிறகு வயிறு உப்புதலை அது தடுக்கும். கூடுதலாக வெயில் காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால், எலக்ட்ரோலைட் அளவு சமமாக இருக்கும்.
பச்சை மாங்காயில் செய்யும் ஒருவகை பானம் இது. இதில் வைட்டமின் பி இருக்கிறது. இது நமது குடலில் இருக்கும் நச்சுகளை நீக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று போக்கைகூட கட்டுபடுத்தும்.
செய்முறை: பச்சை மாங்காய் 500 கிராம், ½ கப் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் வறுத்த சீரகம், நறுக்கிய புதினா, 2 கப் தண்ணீர்.
மாங்காய்களை நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும், தோலை மட்டும் நீக்க வேண்டும். தொடர்ந்து மாங்காய் சதைப் பகுதி, சர்க்கரை, சீரகம், உப்பு புதினா ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும். தொடர்ந்து அத்துடன் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil