பெட்டிக்கடைகளில் கிடைக்கும் பால் பன் எப்படி செய்வது என்று கோமதிஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். உடனே சாப்பிட்டால் சாஃப்டாகவும் ஊறவைத்து சாப்பிட்டால் இனிப்பு பன் போலவும் இருக்கும் ஒரு ஸ்வீட் ரெசிபியான பால்பன் செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
மைதா தயிர் நெய் சர்க்கரை பேக்கிங் சோடா
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பவுலில் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். வேறொரு கப்பில் தயிர், சர்க்கரை பொடியை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.
மைதா மாவில் சூடான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கைகளால் லேசாக பிசைந்து விட்டு அதில் இந்த தயிர் கலவையையும் சேர்த்து கைகளால் பிசையவும். பின்னர் கட்டி இல்லாமல் தண்ணீர் ஊற்றி பீட் செய்வது போன்று பிசையவும்.
மாவு கெட்டியாக இல்லாமல் தண்ணீர் மாதிரியாகவும் இல்லாமல் பேஸ்ட் மாதிரி ஒன்றோடு ஒன்று ஒட்டிய பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் இதனை சிறிது நேரம் அப்படியே மூடி வைத்து விடவும். அடுத்ததாக வேறொரு கப்பில் சர்க்கரை ஊற்றி அரை கம்பி பதம் வரும் வரை பாகு மாதிரி செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக மாவை திரட்டி எண்ணெயில் பொறித்து சர்க்கரைப்பாகில் போட்டு எடுத்தால் சுவையான பால் பன் ரெடி ஆகிவிடும்.