நீங்கள் மிகவும் சோர்வாக, சக்தியே இல்லாதது போல் உணர்ந்தால், நீங்கள் ஜங் ஃபூட்ஸ் சாப்பிடாமல், பழங்கள், நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது.
நீங்கள் சோர்வாக உணரும் போது, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் சாப்பிட்டால் உடனடியாக உத்வேகமாக செயல்படுவீர்கள். இதுபோல தண்ணீர் குடிப்பது நிச்சயம் முக்கியமாக இருக்கிறது. நீர்சத்து பெற மோர், சூப் போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். உடனடியாக எனர்ஜி தருவதற்கு என்ன உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஆரஞ்சு
இதில் வைட்டமின் சி இருக்கிறது. கூடுதலாக பாஸ்பரஸ், மினரல்ஸ், நார் சத்து இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக செயல்படும்
இளநீர்
வெயில் காலத்தில் குடிப்பது மிகவும் நல்லது. அதுபோல வேகமாக உடலுக்கு சக்தியை கொடுக்கும்
பேரீச்சை
இது உடனடியாக உடலுக்கு உத்வேகத்தை கொடுக்கும். கடினமான உடல் பயிற்சிக்கு பிறகு உடலுக்கு சக்தி வேண்டும் என்றால் பேரீச்சை சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், சிங்க, இரும்பு சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது.