Advertisment

தினமும் ஒரு சிவப்பு கொய்யா… சுகர், பி.பி பற்றி கவலை வேண்டாம்; சித்த மருத்துவர் சிவராமன்

தொடர்ந்து சிவப்பு கொய்யா சாப்பிட்டு வர பாரம்பரியமாக உள்ள சர்க்கரை நோயையும் தடுக்க முடியும்.

author-image
WebDesk
New Update
The doctor explained that guava leaves can control diabetes

சிவப்பு கொய்யாவில் ஏராளமான நன்மைகள் உள்ளது. சர்க்கரை முதல் புற்றுநோய் வரை பாதிப்பு வராமல் தடுக்க கூடிய சத்து உள்ளது என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் பேசுகையில், "நாட்டு சிவப்பு கொய்யா மிகவும் சிறப்பானது. சிவப்பு நிற கொய்யா சிறப்பானது ஏன் என்றால் அந்த கொய்யாவில் உள்ள சிவப்பு நிறம் லைகோபின் என்ற சத்து உள்ளது.

Advertisment

இது பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது. 

எல்லா பழங்களும் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.நோய் வந்தபின் சாப்பிடாமல் தினமும் காய், பழங்கள் சாப்பிடுவது நல்லது.  தினசரி கொய்யா அல்லது பப்பாளி போன்ற பழங்களை காலை உணவின் போது சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.

தொடர்ந்து சிவப்பு கொய்யா சாப்பிட்டு வர பாரம்பரியமாக உள்ள சர்க்கரை நோயையும் தடுக்க முடியும். அதோடு இந்த பழம் புற்றுநோய் பாதிப்பையும் தடுக்கிறது என அவர் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment