முருங்கையின் காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்புச்சத்து முதல் எலும்பு ஆரோக்கியம் என நிறைய சத்துக்கள் நிறைந்த முருங்கையினை முக்கியமான பிசின் விந்தணுக்களை அதிகரிக்க உதவுவதாக டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.
Advertisment
முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அடர் பழுப்பு நிற பசை போன்ற ஒரு பொருள் தான் முருங்கை பிசின். முருங்கை மரத்தில் அதிக அளவில் இருக்கக்கூடிய கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை முருங்கை பிசினில் உள்ளது.
முருங்கை பிசின் பொடியை பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து அருந்தினால் ஆண்மை அதிகரிப்பதோடு, பாலியல் தொந்தரவுகள் நீங்கும், விந்தணுக்களையும் அதிகரிக்கும். அதேபோல், முருங்கை பிசினை இரவில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் அது ஜெல்லி போன்று இருக்கும். அதனை பாலில் கலந்தும் குடிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியும் பெறும் என்கிறார் ஆஷா லெனின்.
அதுமட்டுமின்றி, முருங்கை பிசினை அழகுக்காகவும் பயன்படுத்தலாம். முருங்கை பிசினை தூளாக இடித்து பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகமும் பொலிவுடன் காணப்படும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.