முட்டி வலி இருக்கா? இந்த உணவுகளை கண்டிப்பா எடுக்காதீங்க: டாக்டர் அபிராமி ரமேஷ்
மூட்டு வலி இருப்பவர்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர் அபிராமி ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
மூட்டு வலி இருப்பவர்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர் அபிராமி ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் அனைவருக்கும் பெரும்பாலும் மூட்டு வலி இருக்கும். அதன்படி, மூட்டு வலி இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் அபிராமி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில், புளிப்பு சுவை இருக்கும் அனைத்து உணவுகளையும் மூட்டு வலி இருப்பவர்கள் தவிர்த்து விடலாம். குறிப்பாக, புளி மற்றும் தக்காளி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர் அபிராமி ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துவையல் மற்றும் ஊறுகாய் வகைகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் உடலில் வாதத்தையும், வலியையும் அதிகமாக்கும் என்று மருத்துவர் அபிராமி ரமேஷ் வலியுறுத்துகிறார். அடுத்ததாக, பருப்பு மற்றும் கிழங்கு வகைகளும் வாதத்தை அதிகமாக்குவதால் அவற்றையும் கூடுமானவரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது தவிர பருப்பு கலந்த பொருட்களை சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும் போது, அதில் பூண்டு, மிளகு மற்றும் பெருங்காயம் சேர்த்து சாப்பிட வேண்டும். பருப்பு வகைகளில் கொண்டை கடலையாக இருந்தாலும் தவிர்த்து விடுவது நல்லது.
Advertisment
Advertisements
இவை அனைத்தையும் தவிர்த்து விடுவதால், சத்துகள் நிறைந்த காய்கறி வகைகளை அதிக அளவில் சாப்பிடலாம் என்று மருத்துவர் அபிராமி ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெற முடியும்.
எனினும், மூட்டு வலி பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் வீட்டு வைத்திய முறையை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.
நன்றி - RJR Hospitals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.