இன்சுலின் தேவை குறையும்... மா, பலா, வாழையை இப்படி சாப்பிடுங்க போதும்: டாக்டர் கே.ஆர். அக்ஷயன்
நீரிழிவு நோயாளிகள் பழங்களை மட்டுமே காலை உணவாக உட்கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார். காலை உணவாக பழங்களை உட்கொள்ளும்போது, சாலட் செய்வதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு வகை பழத்தை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போன்ற இனிப்பு அளிக்கக் கூடிய பழங்களை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்கு மாறாக, நீரிழிவு நோயாளிகள் இந்தப் பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஒரு மருத்துவர் அக்ஷயன் கூறுகிறார்.
Advertisment
இது குறித்த தகவல்களை மிஸ்டர் லேடிஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பழங்களை எப்போது, எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே முக்கியம் என்று அவர் வலியுறுத்துகிறார். இவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை போல உடலால் குளுக்கோஸாக மாற்றப்பட வேண்டியதில்லை. இது இன்சுலின் தேவையை குறைக்கிறது என அவர் கூறுகிறார்.
நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்வதற்கு முன்னும், பின்னும் தங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து, நேர்மறையான விளைவை நேரடியாக காணுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்தப் பழங்களை உட்கொள்வதற்கான ஒரே நிபந்தனை, அவற்றை சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது தான் என மருத்துவர் அக்ஷயன் விளக்கம் அளித்துள்ளார்.
நீரிழிவு நோயாளிகள் பழங்களை மட்டுமே காலை உணவாக உட்கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார். காலை உணவாக பழங்களை உட்கொள்ளும்போது, சாலட் செய்வதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு வகை பழத்தை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், பல நோயாளிகள் தங்கள் HbA1c அளவைக் குறைத்துள்ளதாக மருத்துவர் அக்ஷயன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.