சுகரை குறைக்க வேண்டும் என்றால் முதலில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டும் என்று டாக்டர் அக்ஷயன் மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார். ல்லீரல் சரியாக செயல்பட்டால், கொழுப்பைக் கரைக்கும் பித்த நீர் சரியாக சுரந்து, இரத்தத்தில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இதனால் பல இருதய நோய்கள் மற்றும் சருமப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Advertisment
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் கல்லீரலை சுத்திகரிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் குடிக்க வேண்டிய ஒரு ஜூஸ் பற்றியும் டாக்டர் கூறுகிறார்.
நான்கு பெரிய நெல்லிக்காய் கொஞ்சம் கொத்தமல்லி இலை கொஞ்சம் புதினா இலை ஒரு ஓமவல்லி இலை ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை ஒன்றாக அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் இந்த ஜூஸை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஜூஸை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் 48 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜூஸை எடுத்துக்கொள்வதன் மூலம் நாள்பட்ட நோய்களில் இருந்து விரைவாக குணமடையலாம் மற்றும் உடலில் பல மாற்றங்களை உணரலாம் என்று டாக்டர் அக்ஷயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.