/indian-express-tamil/media/media_files/2025/06/22/stomach-cleanse-2025-06-22-14-28-44.jpg)
உணவு செரிமானத்தின் முக்கிய உறுப்பு வயிறு. அதனைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம் என்று ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற துரித உணவுகளை உண்பதால் வயிற்றில் கழிவுகள் தேங்குகின்றன. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். இது ஊட்டச்சத்துகள் மற்றும் மருந்துகளை சரியாக உறிந்து கொள்வதற்கு உதவுகிறது.
இதற்காக, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதனை கால் கப் தயிருடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது இரைப்பையை சுத்தப்படுத்தி, மீண்டும் சீராக்க உதவுகிறது. வயிற்றின் நிலையைப் பொறுத்து இதை 7 முதல் 21 நாட்கள் வரை செய்யலாம்.
மேலும், சீரக தண்ணீர் குடிப்பதால் வயிற்றின் செயல்பாடுகள் சமநிலைப்படும். வயிற்றுப் புண்களுக்கு, மாதுளைப் பூக்களை தேனுடன் கலந்து கஷாயம் செய்து சாப்பிடுவதன் மூலம் அவை குணமாகும். கூடுதலாக, காலையில் தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி கலந்து சாப்பிடுவது வயிற்றின் உட்புறத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இது தவிர வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் வயிறு குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒரு முறை வாழைப்பூ மற்றும் மணத்தக்காளி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று ஆரோக்கியத்திற்கு உதவும் என்று மருத்துவர் அக்ஷயம் பரிந்துரைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.