ரொம்ப நாளாக பி.பி இருக்கா? முதல் வேலையாக காலையில் இந்த ஜூஸ் குடிங்க; சீக்கிரமே கட்டுக்குள் வரும்: டாக்டர் ஆர்.கே. அக்ஷயன்

தினசரி காலையில் மாதுளம்பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் ஆர்.கே. அக்ஷயன் கூறுகிறார். அந்த வகையில், மாதுளம் பழ ஜூஸ் எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

தினசரி காலையில் மாதுளம்பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் ஆர்.கே. அக்ஷயன் கூறுகிறார். அந்த வகையில், மாதுளம் பழ ஜூஸ் எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Akshayan tips

நவீன வாழ்க்கை முறையில் பலரையும் அச்சுறுத்தும் ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக இரத்த அழுத்தம் விளங்குகிறது. இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தவில்லை என்றால், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்ற பல தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Advertisment

மரபியல் காரணமாக உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிக உடல் எடை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதிக உப்பு, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதும் இதன் பாதிப்பை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை உயர்த்தும். நீரிழிவு, சிறுநீரக நோய், தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாகவும் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

இந்நிலையில், இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வழிமுறை குறித்து மருத்துவர் ஆர்.கே. அக்ஷயன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினசரி காலையில் மாதுளம்பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார். அந்த வகையில், மாதுளம் பழ ஜூஸ் எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1 மாதுளம் பழம்,
2 நெல்லிக்காய்கள்,
தண்ணீர் மற்றும்
சிறிதளவு புதினா இலைகள்

செய்முறை:

ஒரு மாதுளம் பழத்தில் இருக்கும் முத்துகள் அனைத்தையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் சிறிதாக நறுக்கிய இரண்டு நெல்லிக்காய்கள் மற்றும் சிறிதளவு புதினா இலைகள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளம் ஜூஸ் தயாராகி விடும். இதனை தினசரி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று மருத்துவர் ஆர்.கே. அக்ஷயன் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Pomegranate and its amazing health benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: