நீண்ட நேர உடலுறவுக்கு பாலுடன் இந்த 2 மூலிகை பவுடர்: சொல்லும் டாக்டர் அலீம்
உடலுறவு மேற்கொள்ளும் போது சிலருக்கு விந்து விரைவாக வெளியேறும் பிரச்சனை இருக்கும். இதனை எவ்வாறு தடுப்பது என்று மருத்துவர் அலீம் விளக்கம் அளித்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
உடலுறவு மேற்கொள்ளும் போது சிலருக்கு விந்து விரைவாக வெளியேறும் பிரச்சனை இருக்கும். இதனை எவ்வாறு தடுப்பது என்று மருத்துவர் அலீம் விளக்கம் அளித்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் தீவிர பிரச்சனையாக விந்து முந்துதல் இருக்கிறது. அதாவது உடலுறவு மேற்கொள்ளும் போது விரைவாகவே விந்து வெளியேறுவதை இவ்வாறு அழைக்கின்றனர். சுமார் 30 விநாடி முதல் 1 நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால் அது பிரச்சனையாக கருதப்படலாம் என்று மருத்துவர் அலீம் தெரிவித்துள்ளார்.
Advertisment
அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்யும் போது ஆணுறுப்பின் நரம்புகள் பாதிக்கப்படுவதாக மருத்துவர் அலீம் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக விந்து விரைவாகவே வெளியேறுவதாக அவர் கூறுகிறார். இது தவிர மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் விந்து முந்துதல் பிரச்சனை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், உடல் எடை அதிகமாக இருந்தாலும் இத்தகைய பிரச்சனை ஏற்படலாம்.
அந்த வகையில் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நேரத்திற்கு உடலுறவு மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர் அலீம் அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில் ஜாதிக்காய் பௌடர் இதற்கு மருந்தாக பயன்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது விந்தணுக்களின் தரத்தை அதிகரித்து குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்க உதவுவதாக கூறப்படுகிறது. மிக முக்கியமாக நீண்ட நேர உடலுறவுக்கு இது பயன்படுகிறது.
இதனை காலை மற்றும் இரவு நேரத்தில் 20 கிராம் அளவில் எடுத்து பாலில் கலந்து உணவுக்கு பின்பு குடிக்கலாம் என்று மருத்துவர் அலீம் பரிந்துரைக்கிறார். இதேபோல், அமுக்கிரா பௌடரையும் பாலில் கலந்து குடிக்கும் போது நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, இது போன்ற இயற்கை மூலிகைகள் பயன்படுத்தும் போது விந்து விரைவாக வெளியேறும் பிரச்சனையை குறைக்கலாம்.
Advertisment
Advertisements
நன்றி - Dr. Aleem Clinic Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.