5 நாள் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ்... கல்லீரல் கொழுப்புக்கு குட்பை; இப்படி செய்து குடிங்க: டாக்டர் வி. ஆர் அறிவழகன்

கொழுப்பு கல்லீரல் உட்பட கல்லீரல் பிரச்சினைகளுக்கான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி டாக்டர் அறிவழகன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

கொழுப்பு கல்லீரல் உட்பட கல்லீரல் பிரச்சினைகளுக்கான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி டாக்டர் அறிவழகன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
fatty liver  arivalagan

இன்றைய வேகமான வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால், கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) என்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Advertisment

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படும் இந்த நிலை, ஆரம்பத்தில் அறிகுறிகள் ஏதுமின்றி இருக்கலாம், ஆனால் கவனிக்கப்படாவிட்டால் கடுமையான கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். இந்தச் சூழலில், பிரம்மஸ்ரீ யோகி பேராசிரியர் டாக்டர். வி.ஆர். அறிவழகன் Ph.D. அவர்கள், ஆனந்த யோகம் யூடியூப் காணொளி மூலம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்களை விளக்கியுள்ளார்.

இந்தக் காணொளியில் நமது சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கல்லீரலை எவ்வாறு பலப்படுத்தலாம் மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று டாக்டர். அறிவழகன் விவரிக்கிறார்.  

நெல்லிக்காய்: வைட்டமின் 'சி' மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள நெல்லிக்காய், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அதன் செயல்பாட்டைத் தூண்டுகிறது.

Advertisment
Advertisements

சீரகம்: செரிமானத்திற்கு உதவும் சீரகம், கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தி, பித்தநீர் சுரப்பை சீராக்க உதவுகிறது.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கல்லீரல் செல்களைப் பாதுகாத்து, சேதமடைவதைத் தடுக்கின்றன.

கற்றாழை: கற்றாழையின் சதைப்பகுதி, கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, சாறு எடுத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம், கொழுப்பு கல்லீரல் பிரச்சினையில் நல்ல முன்னேற்றம் காணலாம் என்று டாக்டர். அறிவழகன் குறிப்பிடுகிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: