விந்து முந்தல்? கசகசா, மாதுளை இப்படி இந்த நேரத்துல சாப்பிடுங்க: டாக்டர் அருண் சின்னையா

விந்து முந்துதல் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு டாக்டர் அருண் சின்னையா கசகசா மற்றும் மாதுளை உதவுவதாக கூறியுள்ளார்.

விந்து முந்துதல் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு டாக்டர் அருண் சின்னையா கசகசா மற்றும் மாதுளை உதவுவதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
arun chinnaya

பாலியல் மந்திரம் டிவி-யில் பல வியூவர்ஸ் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், டாக்டர் அருண் சின்னையா, விந்து முந்துதல் (Premature Ejaculation) பிரச்சினைக்கான காரணங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். குறிப்பாக, கசகசா லேகியம் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த விளக்கங்கள், பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisment

விந்து முந்துதல் பிரச்சினைக்கு டாக்டர் அருண் சின்னையா ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே ஒரு தீர்வை பரிந்துரைத்துள்ளார். அது பலரால் பயன்படுத்தப்பட்டு, சிறந்த பலனையும் அளித்து வருகிறதாம். அந்தப் பரிந்துரை: மாதுளம்பழம் மற்றும் கசகசா கலவை.

செய்முறை: 2 கிராம் கசகசாவை காலையில் தண்ணீரில் ஊறவைத்து, இரவில் ஒரு மாதுளம்பழத்தை பிரித்து மிக்ஸியில் போட்டு, ஊறவைத்த கசகசாவையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வடிகட்டி சாப்பிட வேண்டும்.

இந்தக் கலவை நித்திரையை உண்டாக்கும் (தூக்கமின்மைக்கு உதவும்) மற்றும் உடலுக்கு நல்ல போஷாக்கு அளிக்கும். மாதுளம்பழம் வயிற்றுப் புண், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும். சர்க்கரை வியாதியால் ஆணுறுப்பில் ஏற்படும் நரம்பு மற்றும் இரத்தக் குழாய் சேதாரங்களுக்கும், இரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலைக்கும், இந்தக் கலவை நன்மை பயக்கும். 

Advertisment
Advertisements

கசகசாவை எப்போதும் அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான பயன்பாடு வாந்தி அல்லது மயக்க நிலையை ஏற்படுத்தலாம்.

புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு ஆகிய சுவைகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் இருக்கும். இதுவும் விந்து முந்துதலுக்கு ஒரு காரணம். காரத்துடன் இனிப்பும், புளிப்பும் நட்புச் சுவைகளாக இருந்தாலும், காரத்தால் வரும் நோய்களை இந்தச் சுவைகள் அதிகப்படுத்தும்.

விந்து முந்துதல் பிரச்சனை உள்ளவர்கள் காரக்குழம்பு, புளிக்குழம்பு, ரசம், ஊறுகாய், இட்லி, தோசை, சான்ட்விச், பப்ஸ், பீட்ஸா, பர்கர், இன்ஸ்டண்ட் சப்பாத்தி, பூரி போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health sperm count increase

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: