சுகரை விரட்டும் கருஞ்சீரகம்? எந்த அளவில் எடுக்கணும்? விளக்கும் டாக்டர் அருண்குமார்

சர்க்கரை நோய்க்கு முக்கியமானது மாவுச்சத்து குறைந்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி தான். கருஞ்சீரகத்தை ஒரு கூடுதல் ஆதரவாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.

சர்க்கரை நோய்க்கு முக்கியமானது மாவுச்சத்து குறைந்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி தான். கருஞ்சீரகத்தை ஒரு கூடுதல் ஆதரவாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
black cumin uses

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்? மற்றும் அதிலுள்ள நன்மைகள் என்ன என்பதைப் பற்றி மருத்துவர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் விவரித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

Advertisment

கருஞ்சீரகத்தின் அறிவியல் பெயர் நிஜெல்லா சட்டைவா (Nigella Sativa) ஆகும். இதில் டைமோகுயினோன் (Thymoquinone) எனும் ரசாயனம் உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. 

கருஞ்சீரகப் பொடி அல்லது எண்ணெய் மற்றும் டைமோகுயினோன் மாத்திரை வடிவில் செய்யப்பட்ட ஆய்வுகளில், கருஞ்சீரகம் அல்லது டைமோகுயினோன் பயன்படுத்தியவர்களுக்கு HbA1c (சராசரி சர்க்கரை அளவு) சராசரியாக 0.5% குறைந்துள்ளது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, 8.5 அல்லது 8.6 ஆக இருந்த HbA1c, 8.1 அல்லது 8.2 ஆக குறைந்துள்ளது. டைமோகுயினோன் மாத்திரை உட்கொண்டவர்களுக்கு HbA1c 7.3 லிருந்து 6.8 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், இது சர்க்கரை நோய்க்கு முழுமையான தீர்வு அல்ல, ஒரு கூடுதல் ஆதரவு மட்டுமே.

Advertisment
Advertisements

சர்க்கரை நோய்க்கு மாவுச்சத்து குறைந்த உணவு முறை சிறந்தது. இந்த உணவுமுறையால் HbA1c 13-லிருந்து ஆறுக்கும் கீழ் குறைக்கலாம். கருஞ்சீரகத்தை ஒரு நாளைக்கு அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மூலிகை பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே, சர்க்கரை நோய்க்கு முக்கியமானது மாவுச்சத்து குறைந்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி தான். கருஞ்சீரகத்தை ஒரு கூடுதல் ஆதரவாகப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: