நாட்டுக் கோழி vs பிராய்லர்: எந்த முட்டை பெஸ்ட்? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடணும்? டாக்டர் அருண்குமார் நச் பதில்
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்றும், முட்டையின் மஞ்சள் கரு நம் உடலுக்கு நல்லதா என்றும் மருத்துவர் அருண் குமார் அறிவியல்பூர்வமான விளக்கங்களை கொடுத்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்றும், முட்டையின் மஞ்சள் கரு நம் உடலுக்கு நல்லதா என்றும் மருத்துவர் அருண் குமார் அறிவியல்பூர்வமான விளக்கங்களை கொடுத்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.
ஆரோக்கியமான உணவு வகைகளில் முதன்மையானதாக முட்டை இருக்கிறது. எனினும், எந்த அளவிற்கு முட்டை சாப்பிட வேண்டும் என்றும், முட்டையின் மஞ்சள் கரு உடலுக்கு நல்லதா என்றும் பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுகிறது. இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
முட்டையின் வெள்ளைக் கரு முற்றிலும் புரதமாகும். அதன்படி, 6 கிராம் புரதம் இதில் இருக்கிறது. மஞ்சள் கருவில் 5.5 கிராம் கொழுப்பு இருக்கிறது. முட்டையில் சச்சுரேட்டட் கொழுப்பு 28 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 40 சதவீதம் அளவிற்கு மோனோ அன்சச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. 180 மில்லி கிராமிற்கு கொலஸ்ட்ரால் இருக்கிறது.
ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 1800 முதல் 2000 மில்லி கிராம் வரை கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, மாவுச் சத்து உணவுகளை குறைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று முட்டைகள் சாப்பிட்டால் கூட நம உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று அவர் கூறுகிறார்.
இது தவிர பிராய்லர் முட்டை சாப்பிடலாமா அல்லது நாட்டுக் கோழி முட்டை சாப்பிட வேண்டுமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும். அந்த வகையில், ஒமேகா 3 சத்துகள் மட்டும் நாட்டுக் கோழி முட்டையில் சற்று அதிகமாக இருக்கிறது. மற்ற அனைத்து சத்துகளும் சமமான அளவில் தான் இருக்கின்றன. எனவே, நமக்கு எளிதாக கிடைக்கும் முட்டை எதுவாக இருந்தாலும் சாப்பிடலாம் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.