/indian-express-tamil/media/media_files/2025/06/03/0HxRbFzXmeirb8BRu8fe.jpg)
உணவே மருந்து என்ற கூற்றின் அடிப்படையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் நம்முடைய உணவு முறையில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சத்தான உணவு பொருட்களை சாப்பிடும் வழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பல்வேறு வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். மேலும், அதிகமாக உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் வழக்கும் இன்று அதிகரித்து வருகிறது. இதனை கூடுமான வரை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில், அங்கு பரிமாறப்படும் உணவு எந்த அளவிற்கு சுகாதாரமாக இருக்கும் என்று நமக்கு தெரியாது.
சில சமயங்களில் உணவகத்தில் சாப்பிடும் பொருட்கள் கெட்டுப் போனதாக இருக்கக் கூடும். இதனால், கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதனை தடுக்க ஒரு சிம்பிளான வழிமுறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ Ys Cooking என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கெட்டுப் போன உணவை எதிர்பாராத விதமாக சாப்பிட நேரிட்டால், உடனடியாக வீட்டுக்கு வந்து ஒரு மருந்து தயாரித்து குடிக்கலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். இதற்காக இரண்டு ஸ்பூன் தேன், நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஏலக்காய் விதைகள் ஆகியவற்றை கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி கடுமையான வயிற்றுப் போக்கு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மருந்தை குடித்தால், பிரச்சனை குணமடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.