தினமும் 5 சுண்டைக் காய் இப்படி சாப்பிடுங்க... சுகர் வரும் முன் தடுக்க டாக்டர் ஆஷா லெனின் டிப்ஸ்
தினமும் சுண்டைக் காய் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முந்தைய நிலை குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் சில பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அதனை தடுக்க முடியும் என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 5 சுண்டைக் காய்கள் நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
Advertisment
குறிப்பாக, சுண்டைக் காயை மோரில் கலந்து குடிக்கலாம். உப்பு கலக்காத சுண்டைக் காய் வத்தல்களை தொடர்ந்து சாப்பிடலாம். இதேபோல், தேவையான அளவு கொய்யாப் பழங்களையும் சாப்பிடலாம். மேலும், காலை உணவு சரியாக எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என மருத்துவர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.
எனவே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் கட்டாயமாக காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிகப்படியான வியர்வை, திடீரென வரும் மயக்கம், படபடப்பான உணர்வு அனைத்தும் சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய கட்டமான லோ-சுகருக்கான அறிகுறிகள் என மருத்துவர் ஆஷா லெனின் குறிப்பிடுகிறார்.
உணவுப் பழக்கத்துடன் சேர்த்து நடைபயிற்சி, சீரான உடற்பயிற்சி மேற்கொள்வதும் அவசியம். தினசரி ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.