தயிர் மாதிரி இருக்கும்; ஆனா இது தயிர் இல்லை; சட்டுனு சுகர் குறைய இதை யூஸ் பண்ணுங்க: டாக்டர் ஆஷா லெனின்
சர்க்கரை நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறை மாற்றம் குறித்து மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் சர்க்கரை அளவு குறையும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறை மாற்றம் குறித்து மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் சர்க்கரை அளவு குறையும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய எத்தனையோ உணவு முறை குறித்து மருத்துவர்கள் தொடர்ச்சியாக பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் இரத்தத்தில் சுகரின் அளவை குறைக்க கெஃபிரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
Advertisment
வழக்கமாக பாலை உறை ஊற்றி தயிராக மாற்றும் பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், இவ்வாறு உறை ஊற்றுவதற்கு தயிருக்கு பதிலாக கெஃபிரை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
இந்தக் கெஃபிரை பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அல்லது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கிய கெஃபிரை எப்போதும் கண்ணாடி பாட்டிலில் தான் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும் என மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, கண்ணாடி பாட்டிலில் போட்டு அதன் மேற்பகுதியில் வெள்ளைத் துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும்.
இதனை பயன்படுத்தும் முறையை மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். அதன்படி, பாலை நன்றாக காய்த்து விட்டு ஆற வைக்க வேண்டும். இந்தப் பாலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கெஃபிரை போட்டு குடிக்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து போன்று செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
சாதாரண பால் குடித்து சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தால், அதில் சுகரின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், கெஃபிர் கலந்த பால் குடித்தவர்களின் சர்க்கரை அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். ஏனெனில், இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
ப்ரோபையோட்டிக் மற்றும் ப்ரீபையோட்டிக் போன்ற சத்துகளுக்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் இந்த சூழலில், இது போன்ற சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Behindwoods O2 Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.