இதை வறுத்து பொடி செய்து வச்சுக்கோங்க; மாரடைப்பை நெருங்க விடாத பொருள் இது: டாக்டர் ஆஷா லெனின்
கருஞ்சீரகத்தை தினசரி உட்கொண்டால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கருஞ்சீரகத்தை தினசரி உட்கொண்டால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு கருஞ்சீரகம் மருந்தாக அமைகிறது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை இது குறைக்கிறது என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார். ஏனெனில், கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது இருதய இரத்தக் குழாய்கள் அடைக்காமல் இருப்பதற்கு உதவி செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
எனவே, கருஞ்சீரகத்தை தினசரி எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்துகிறார். அதன்படி, 100 கிராம் கருஞ்சீரகம், 100 கிராம் வெந்தயம், 50 கிராம் அளவிற்கு ஓமம் ஆகியவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு சிட்டிகை அளவில் சாப்பிடலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
இவ்வாறு, கருஞ்சீரகத்தை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லையென அவர் தெரிவித்துள்ளார். எனினும், அடிக்கடி கருஞ்சீரகம் சாப்பிடுபவர்களுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இது போன்ற பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை இருப்பவர்கள் கருஞ்சீரகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம்.
இது தவிர இருதய பாதிப்பிற்காக சிலர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். அப்படி தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள், தங்களது மருந்துகளை நிறுத்தி, இது போன்று வீட்டு வைத்திய முறையில் ஈடுபடுவது பெரும் சிக்கல்களை உருவாக்கும். அந்த வகையில் இது போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இதனை உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் ஆலோசனையை பின்பற்றுவது தேவையற்றை பிரச்சனைகள் உருவாவதை தடுக்க உதவும்.
Advertisment
Advertisements
நன்றி - Sri Devi's Creativity Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.