குதிரை பலம் கொடுக்கும் அஸ்வகந்தா... எப்படி சாப்பிடணும்? விளக்கும் டாக்டர் அசோக்
அஸ்வகந்தா மூலிகையில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் அசோக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அஸ்வகந்தா மூலிகையில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் அசோக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சக ஆண்களிடம் கூட யாரும் பகிர்ந்து கொள்வதில்லை. அதிலும், விறைப்புத் தன்மை மற்றும் விந்தணுக்கள் தொடர்பான பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆண்கள் தயக்கம் காண்பிக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு பொருள் குறித்து மருத்துவர் அசோக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர் அசோக் கூறுகிறார். குறிப்பாக, ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோனை சீராக சுரக்க வைப்பதற்கு இது பயன்படுகிறது.
குறிப்பாக, டி.ஹெச்.இ.ஏ என்ற ஹார்மோனை இது அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் உறவு மீது ஆர்வம் அதிகமாகும். விறைப்புத் தன்மையை அதிகரிக்க இது உதவிகரமாக இருக்கிறது. இது தவிர விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் அஸ்வகந்தா உயர்த்துகிறது.
இது தவிர மன அழுத்தத்தையும் அஸ்வகந்தா குறைக்கிறது. இதன் காரணமாகவும் டெஸ்டோஸ்ட்ரோன் எண்ணிக்கை கூடும். அதனடிப்படையில், குழந்தையின்மை பிரச்சனைக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு அஸ்வகந்தா மருந்தாக செயல்படுகிறது என்று மருத்துவர் அசோக் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த அஸ்வகந்தாவை பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவர் அசோக் விளக்கம் அளித்துள்ளார். சாதாரணமாக ஒரு நாளைக்கு 300 முதல் 500 மில்லி கிராம் அளவில் அஸ்வகந்தாவை உட்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும், இந்த அஸ்வகந்தா பொடியாகவும் சில இடங்களில் மாத்திரை வடிவத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பலன்கள் கூடுதலாக இருக்க வேண்டுமென்றால் அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் அசோக் அறிவுறுத்துகிறார்.
ஆனால், அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் இதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். அஸ்வகந்தா பொடியை பால், தண்ணீர் அல்லது தேனில் கலந்து குடிக்கலாம். முக்கியமாக அஸ்வகந்தா எடுத்துக் கொண்டால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்று மருத்துவர் அசோக் கூறியுள்ளார்.
நன்றி - Sri Chakra Health care Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.