ஆப்பிள், ஆரஞ்சை விட பல மடங்கு சத்து... இந்த ஒரு பழத்தில் அம்புட்டு நன்மை இருக்கு: சொல்லும் டாக்டர் அஸ்வின் விஜய்
கொய்யாப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர் அஸ்வின் விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை விட ஏராளமான சத்துகள் இதில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
கொய்யாப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர் அஸ்வின் விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை விட ஏராளமான சத்துகள் இதில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
நமது ஊரில் இயற்கையாகவே கிடைக்கும் பழங்களுக்கு ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதன்படி, கொய்யா பழத்தில் இருக்கும் எண்ணற்ற பயன்களை மருத்துவர் அஸ்வின் விஜய், ஸ்டெரெந்த் இந்தியா மூவ்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
Advertisment
கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு, ஆப்பிள், ஸ்ட்ராபெரி போன்ற வெளிநாட்டு பழங்களுக்கு நிகரான சத்துக்களை இது கொண்டுள்ளது.
கொய்யாவில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். கொய்யாவில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
வெப்பமான காலங்களில் ஏற்படும் நீரிழப்பை தடுக்க கொய்யா உதவுகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துகின்றன. கொய்யாவில் உள்ள லைகோபீன் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
Advertisment
Advertisements
கொய்யாவில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், செரிமான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது. கொய்யாப்பழம் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பழம். எனவே, வாரம் இரண்டு முறையாவது இதை சாப்பிடுவது நல்லது என்று டாக்டர் அஸ்வின் விஜய் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.