சின்ன வேலை செஞ்சா கூட சோர்வு... கெட்ட கொழுப்பு அறிகுறி; இந்த உணவை தொடாதீங்க: டாக்டர் தீபா
டீக்கடைகள் அல்லது பேக்கரி போன்ற கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் இருந்து வரும் கொழுப்புகள் (டிரான்ஸ் கொழுப்புகள்) தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
டீக்கடைகள் அல்லது பேக்கரி போன்ற கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் இருந்து வரும் கொழுப்புகள் (டிரான்ஸ் கொழுப்புகள்) தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியம். ஆனால், கொலஸ்ட்ரால் என்றால் என்ன, கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது, அதன் அறிகுறிகள் என்ன மற்றும் அதை எப்படி குறைப்பது என்பது குறித்து பலருக்கும் தெளிவான புரிதல் இருப்பதில்லை.
Advertisment
இது போன்ற கேள்விகளுக்கான பதிலை மருத்துவர் தீபா அருளாளன், மிஸ்டர் லேடிஸ் என்ற யூடியூப் சேனலில் விரிவாக தெரிவித்துள்ளார். அதன்படி, எண்ணெயை முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல என்று மருத்துவர் தீபா அருளாளன் விளக்குகிறார். ஏனெனில், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. அனைத்து கொழுப்புகளும் கெட்டவை அல்ல என்றும், டீக்கடைகள் அல்லது பேக்கரி போன்ற கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் இருந்து வரும் கொழுப்புகள் (டிரான்ஸ் கொழுப்புகள்) தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். எனவே, இத்தகைய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
கொலஸ்ட்ரால் அளவைச் சரிபார்க்க லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்யுமாறு பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் HDL (நல்ல கொலஸ்ட்ரால்), LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பவர்களால் சிறிய வேலை கூட செய்ய முடியாத அளவிற்கு சோர்வு இருக்கும். இதனை தடுக்க உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் அவசியம்.
இதைத் தொடர்ந்து, தினை, பார்லி, ஓட்ஸ் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது, பீட்டா-குளுக்கன் கொண்டிருப்பதால், குளுக்கோஸ் மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதிசெய்து, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுக்கிறது. பசலைக் கீரை, சுரைக்காய், பூசணிக்காய் மற்றும் புடலங்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதும் பரிந்துரைக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
உடல் பருமன் உள்ளவர்கள் எடை குறைப்பது மிகவும் முக்கியம். தினமும் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும், இரத்த நாளங்களை பாதுகாப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தத்தை குறைத்தல், போதுமான தூக்கம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல், மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பூண்டு, இரத்த நாளங்களை பாதுகாக்கும் மற்றும் மாரடைப்பை தடுக்கும் திறன் கொண்டது என்று வலியுறுத்தப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.